ரத்த சோகையை அடித்து விரட்டும் முருங்கைக் கீரை சூப்
முருங்கைக் கீரையில் பல நன்மைகள் உள்ளது.
முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி சாப்பிட்டால் ரத்த சோகை போன்ற பல பிரச்சினைகள் நீங்கும்.
முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை - ஒரு கப்
- பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்
- சீரகம் - அரை டீஸ்பூன்
- நெய்
- மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
- வெங்காயம் -1
- பூண்டு பல் - 4
- தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவைக்கு
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரில் பாசிப்பருப்பு, கீரை, சீரகம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனவுடன் குக்கரை திறந்து பருப்பு கலவையை நன்கு மசிக்கவும். வாணலியில் நெய் விட்டு உருகியதும் பருப்பு, முருங்கைக்கீரை சாற்றை ஊற்றவும்.
இதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பருகலாம்.
சத்தான முருங்கைக் கீரை சூப் ரெடி.