வெறும் வயிற்றில் 4 வில்வ இலைகள் - உடலுக்கு கிடைக்கும் நன்மை
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம் என்பார்கள். இதன் காரணத்தால் கோவில்களில் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இது கோவில்களில் கட்டாயமாக இறைவழிபாட்டிற்கு பயன்படுகிறது.
வில்வமர நிழல், காற்று போன்றவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. இதன் வேர் நோயை நீக்கி உடலை தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும்.
குருதிக் கசிவை நிறுத்தும். இது தவிர இதன் பழத்திலும் பல சத்துக்கள் இருக்கின்றன்றது. நோய் நீக்கி உடல் தேற்றும். பழத்தின் ஓடு காய்ச்சல் போக்கும். எரிச்சல் தணிக்கும்.
பூ மந்தத்தைப் போக்கும். இத்தனை நன்மைகள் கொண்ட இந்த இலைகளை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் என்ன பயன் என்பதை பார்க்கலாம்.

காலையில் இரண்டு வில்வ இலைகள்
வில்வ இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் பி1, வைட்டமின் சி, கால்சியம், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், ரிபோஃபிளவின், நார்ச்சத்துக்கள், ஆகிய சத்துக்கள் இருக்கின்றன.
ரத்த சர்க்கரை - வில்வ இலைகள் லேசான கசப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட ஒரு இலையாகும். இந்த இலைகள் நான்கு எடுத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம்.
இதன் மூலம் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும். இதை செய்வதன் மூலம் உங்கள் குளுக்கோஸ் அளவில் நல்ல மாற்றங்கள் தெரியும்.

அல்சர் பிரச்சினை - அல்சருக்கு பல உணவுகளை சாப்பிட்டு அதை போக்க முற்படுவோம். ஆனால் விலவ இலைகளால் அல்சரை விரைவில் குணமாக்க முடியும்.
இது குடல் மற்றும் வயிற்றப் பகுதிகளுக்குள் இருக்கும் புண்களை ஆற்றுவதோடு இரைப்பையில் ஏற்படும் அழற்சி சார்ந்த பிரச்சினைகள், மலச்சிக்கல் பிரச்சினை, அஜீரணக் கோளாறுகள், கடுமையான வயிற்று வலி ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.

டீடாக்ஸ் - தற்போது டீடாக்ஸ் பானங்கள் என்று விதவிதமாக மக்கள் அருந்துகிறார்கள். இந்த பானங்கள் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் என்பதற்காக குடிக்கப்படுகின்றது.
ஆனால் இவற்றை விட வில்வ இலைக்கு இயற்கையாகவே டீடாக்ஸிங் பண்புகள் இருக்கின்றன. எனவே காலையில் வெறும் வயிற்றில் வில்வ இலைகளை மென்று சாப்பிடும் போது அதன் சாறுகளை விழுங்குவதன் மூலம் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றி டீடாக்ஸ் செய்யும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |