பிரசவத்தின் பின் தொப்பை அதிகரித்து விட்டதா?குறைப்பதற்கான ஈஸியான வழி இதுதான்!
பொதுவாகவே இன்றைக்கு இருக்கும் பெரிய பிரச்சினையே இந்த தொப்பை பிரச்சினைதான். அதை குறைப்பதற்கு அனுதினமும் பாடாய்படுவார்கள். மேலும் தொப்பை அதிகமாக இருந்தால் அது ஆரோக்கிய குறைப்பாட்டை உண்டாக்கும்.
பிரசவத்தின் பின் தொப்பை
அதிலும் குழந்தைப் பெற்றப் பிறகு பெண்களுக்கு இன்னும் அதிக தொப்பை வந்து விடும். அதனைக்குறைப்பதற்கு வீட்டிலேயே இந்த பொடியை தயார் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 50 கிராம் சீரகத்தை வறுக்கவும். நன்கு வாசனை வரும் அளவு வறுத்ததும் வேற ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
அடுத்து 50 கிராம் ஓமம் இதையும் நன்றாக வாசனை வரும் அளவு வறுத்து விட்டு தட்டில் மாற்றி வைக்கவும். அடுத்து 25 கிராம் கருஞ்சீரகம். இதையும் நன்கு வறுத்து தட்டில் கொட்டி வைக்கவும்.
அடுத்து 20 கிராம் ஏலக்காயை வறுக்கவும். அடுத்து 50 கிராம் அளவு சுக்கு பொடியை வறுக்கவும். அதே பாத்திரத்தில் சிறிது பசு நெய் சேர்த்து 20 கிராம் பெருங்காயத்தை வறுக்கவும்.
இவை எல்லாவற்றையும் நன்கு ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் 50 கிராம் அளவு கருப்பட்டி பவுடர் சேர்த்துக் கொள்ளவும். வேறு நாட்டுச்சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டாம்.
இந்த பொடியை காற்று போகாத பாட்டிலில் போட்டு செய்து வைக்கவும். இந்த பொடி ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விடவும்.
இது நன்கு கொதித்ததும் ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இதை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அல்லது காலை 11 மணியளவில் அல்லது இரவு படுக்கப் போகும் முன்பு குடிக்கலாம்.
இதை 15 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அடிவயிற்றில் உள்ள தொப்பை என அனைத்தும் காணாமல் போகும்.