மோரில் இந்த ஒரு பொருளைக் கலந்து குடிங்க... இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு காணாமல் போயிடுமாம்
தினமும் மோரில் இந்த ஒரு பொருள் கலந்து குடித்தால் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்புகள் விரைவில் கரைந்துவிடுமாம். இது குறித்த விரிவான தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோடை காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கமும் அதிகரித்துவிடும். வெப்பத்திலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கு இயற்கையான பானங்கள் உதவுகின்றது.
செயற்கை பானங்களைத் தவிர்த்து இயற்கையான பானங்களாகி மோர், பதனீர் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் மோர் பருகும் போது அதில் சிறிதளவு இஞ்சி கலந்து குடித்தால் உடல் எடையைக் குறைக்க உதவுமாம்.
ஆம் மோர் மற்றும் இஞ்சியில் இருக்கும் நற்பண்புகள் கலந்து உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. தினமும் மோரில் இஞ்சி கலந்து குடித்து வந்தால் உடல் எடை மற்றும் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை கரைத்து விடலாம்.
ஊட்டச்சத்துக்கள்
எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கொண்ட 100 மி.லி மோரில் 40 சதவீதம் கலோரிகள் உள்ளது. பாலை விட மோரில் கலோரிகள் குறைவாக இருக்கின்றது.
மேலும் இது புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாக கருதப்படுவதுடன், மோரில் சிறிதளவு சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளது.
மோரின் நன்மைகள்
மோரில் உள்ள கால்சியம் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவுகின்றது. மேலும் இதிலிருக்கும் புரோபயாட்டிக்குகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் மற்றும் உடலை நச்சு நீக்கம் செய்யவும் உதவுகிறது. செரிமான பிரச்சனைகளை நீக்குவதுடன், இதிலுள்ள அமிலமானது வயிற்றை சுத்தப்படுத்தி அழுக்குகளை வெளியேற்றவும் செய்கின்றது.
பானம் தயாரிப்பது எப்படி?
சிறிதளவு தயிர் மற்றும் சிறிதளது இஞ்சி துண்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை வடிகட்டாமல் அப்படியே கிளாஸ் ஒன்றில் ஊற்றி பருகவும், தேவைப்பட்டால் சிறிதளது சீரக பொடி கலந்து கொள்ளலாம். இந்த பானத்தை நீங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் விரைவிலேயே நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.
உடல் எடையைக் குறைப்பதற்கு தினமும் நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சியும் கட்டாயம் மேற்கொள்வது அவசியமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |