அடிக்கடி வெளியில் வந்து மானத்தை வாங்கும் தொப்பை எப்படி குறைக்கலாம் தெரியுமா?
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அதிகமாக எடை போட்டு விடுவார்கள்.
பிரசவத்திற்கு பின்னர் பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள்.
அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பையை குறைக்கவும் முடியாமல் அதற்கான உடற்பயிற்சிகளையும் செய்ய முடியாமல் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள்.
மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுகின்றது.
சாப்பிட்டு படுக்கையில் இருப்பதால் வயிற்றில் அதிகப்படியாக கொழுப்பு சேர்கின்றது. இது தொப்பையை உருவாக்கும்.
இவ்வளவு வழிகளில் பெண்களுக்கு தொப்பை ஏற்படுகின்றது? இதனை எப்படி குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தொப்பை குறைக்கும் வழிகள்
1. அந்த காலத்து பெண்கள் பிரசவத்திற்கு பின்பு பெண்களின் வயிற்றில் இறுக்கமாக, துண்டை கட்டி இருப்பார்கள். இது தளர்வான பிறப்புறுப்பின் வழியே காற்று உட்செல்வதை தடுகின்றது.
2. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் சோர்வு, பசியை அதிகப்படுத்தும் இதனால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
3. தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். இதனால் தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் டயட் பிளானிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.
4. எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
5. இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு வழிவகுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |