எனக்கு நீ... உனக்கு நான்! ரக்சிதா வெளியிட்ட உருக்கமான பதிவு: ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சீரியல் நடிகை ரக்சிதா மகாலட்சுமி உருக்கமான பதிவொன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் ரக்சிதா
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்த வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்கள் அவரை இன்னும் பிரபலமாக்கியது. அதிலும் இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.
இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அதிலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு புது சீரியல்களில் நடித்து வருவதாக அறிவித்திருந்தார்.
உருக்கமான பதிவு
இந்நிலையில், நேற்று ரக்சிதாவின் கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். இப்படியானதொரு நிலையில், ரக்சிதாவின் தந்தை கடந்த வாரம் உயிரிழந்திருந்தார்.
தந்தையின் இழப்பால் வாடிய ரக்சிதா தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன் அவரின் தாயுடன் கைகோர்த்து நின்று உனக்கு நான் எனக்கு நீ என தலைப்பிட்டு பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |