இன்னும் கொஞ்ச நேரத்தில் திருமணம்.. மகளை பார்த்து தந்தை கொடுத்த ரியாக்ஷன்
திருமண உடையில் மகளை பார்த்தவுடன் தந்தைக் கொடுத்த ரியாக்ஷன் காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
திருமணம்
பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி ஒரு கட்டத்திற்கு பின்னர் திருமண வாழ்க்கையில் நுழைய வேண்டும்.
அந்த சமயம், தம்பதிகளை விட பெற்றோர்களே அதிகமான கவலையில் இருப்பார்கள். அதிலும் பெண்ணை பெற்றவர்கள் மிகுந்த சந்தோஷம் இருந்தாலும், தன் மகளை இனிவரும் நாட்களில் தன் மகளாக பார்க்க முடியாது என ஒரு பக்கம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஏனெனின், அவளை பெற்று, வளர்த்து அவளுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து, தன்னுடன் இருப்பாள் என எதிர்பார்க்க முடியாத நிலையில் தந்தைமார்கள் அன்றைய நாளில் தவிப்பார்கள்.
அப்படியொரு காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மகளை பிரியும் தந்தையின் வலி
அந்த வகையில், திருமணத்திற்கு தயார் நிலையில் இருக்கும் மணப்பெண் மேக்கப் போட்ட பின்னர் முதல் தடவையாக தன்னுடைய அப்பாவை பார்க்கிறார். அவரால் மகளை பார்த்த சந்தோஷத்தில் பேசாமல் இருக்க முடியவில்லை. கட்டியணைத்து தன்னுடைய அன்பை வெளிகாட்டுகிறார்.
அப்பாவின் நிலையை பார்த்த மகளும், பதிலுக்கு கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொள்கிறார். இந்த காட்சியை பார்க்கும் பொழுது சற்று கவலையாகவே உள்ளது.
இவ்வளவு நாட்கள் தன்னுடைய கைக்குள் இருந்து பெண், நாளை தினம் இருக்கமாட்டாள் என்ற வறுத்தம் தந்தையின் கண்ணில் தெரிகிறது. காணொளியை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு, இந்த தருணத்தில் தன்னுடைய அப்பாவின் நிலையை பார்த்த இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
