சத்தான பீட்ரூட் சப்பாத்தி செய்து பார்க்கலாம்
பீட்ரூட் இரத்தத்திலுள்ள கழிவுகளை நீக்குகிறது. பார்வைத் திறனை அதிகரிக்கிறது. இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.
இவ்வாறு பல நன்மைகளை கொண்டுள்ள பீட்ரூட்டில் சப்பாத்தி செய்து சாப்பிட்டால் எப்படியிருக்கும்? இதில் பீட்ரூட் சப்பாத்தி எவ்வாறு செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மா - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
அரைக்க
பீட்ரூட் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
வெள்ளைப் பூண்டு - 2 பல்
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதை வடிகட்டி, அந்தச் சாறுடன் கோதுமை மா, உப்பு, நெய் சேர்த்து தேவையேற்படின் தண்ணீர் சேர்த்து பிசைந்து அரை மணித்தியாலம் ஊறவைக்கவும்.
ஊறவைத்ததன் பின்னர் சப்பாத்தியாக செய்து கொள்ளவும்.
இறுதியாக தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்தியை போட்டு சிறிது எண்ணெய் விட்டு இரு பக்கமும் வேகவிடவும்.
இப்போது வண்ணமயமான பீட்ரூட் சப்பாத்தி ரெடி.