கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கனுமா? படுக்கையறையில் இதையெல்லாம் வைக்காதீர்கள்
பொதுவாகவே திருமணம் ஆகிய உடன் கொஞ்ச நாள் கணவன் மனைவி சந்தஷமாக இருப்பதும் நாட்கள் செல்ல செல்ல அருவருக்கும் இடையில் நெருக்கம் குறைவதும் வழக்கம் தான்.
ஆனால் இரு ஆண்களை விட பெண்களை அதிகமாக மனதளவில் பாதிக்கின்றது. திருமணத்தின் பின்னர் ஒரு பெண்ணுக்கு கணவன் தான் எல்லாம் என்ற நிலை ஏற்பட்டுவிடுகின்றது. இப்படியிருக்க கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் இருவரையுமே வலுவாக பாதிக்கும்.
இது வீட்டில் உள்ள மற்றவர்களையும் அதிகமாக பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் படுக்கையறை தொடர்பான சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால் இந்த பிரச்சனைகளை இலகுவில் தீர்க முடியும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய பொருட்கள்
படுக்கையறையில் கருப்பு பொருட்களை வைக்க கூடாதாம். இவற்றின் தாக்கம் மனதைக் கனக்கச் செய்கிறது. மேலும், படுக்கையறையைப் பார்க்கும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
படுக்கையறை அலங்கோலமாக இருந்தால், விரக்தி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும் குறையும். கூடுமானவரை, படுக்கையறையில் படுக்கைக்கு அடியில் எந்தப் பொருட்களையும் வைக்கக் கூடாது.
குறிப்பாக படுக்கைக்கு அடியில் தண்ணீர் வைக்க கூடாது இதனால் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து சண்டைகள் அதிகரிக்க காரணமாகிறது.
படுக்கையறையில் சோகமான புகைப்படங்கள், பொம்மைகள், ஓவியங்கள் போன்றவற்றை வைக்க கூடாது. இதனால் தம்பதிகளுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகரிக்கும்.
படுக்கையறையில் தாவரங்களை வைக்க வேண்டாம். இவற்றின் தாக்கம் தம்பதிகளிடையே பிரிவினையை ஏற்படுத்தும். என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
படுக்கையறையில் எலக்ட்ரானிக் பொருட்களை வைக்க வேண்டாம். டிவி, லேப்டாப் போன்றவற்றை ஒதுக்கி வைக்கவும். இதனால் கணவன்-மனைவி இடையே சரியான இணக்கம் இல்லாமல் போகுமாம்.
குறிப்பாக செல்போன் காரணமாக பல கணவன்-மனைவி பிரிந்துள்ளனர். செல்போன் உபயோகத்தால் உணர்வுகள் உடைந்து போகின்றன. இவர்களுக்கு அருகில் உறங்குவதும் பல்வேறு மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இவற்றை பின்பற்றுவதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமையை மேம்படுத்த முடியும் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |