இளநரையை கறுப்பா மாற்றணுமா? மஞ்சள் இருந்தா போதும், பயன்படுத்தும் முறை இதோ
முடி கொட்டுதல் ஒரு பக்க பிரச்சனையாக இருந்தாலும் இன்றைய சமூகத்தினருக்கு நரைமுடி ஒரு பிரச்சனையாக உள்ளது. தலைமுடி கருப்பாக நீளமாக இருந்தால் தான் பார்ப்பதற்கு நம்மையும் அவை அழகாக காட்டும்.
இன்றைய வாழ்க்கை, மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடுகள், ஹார்மோன் சமநிலையின்மையால் முடி உதிர்வு, தலை முடி மெலிவு, வழுக்கை, நரைமுடி என பல வகையான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்.
இதனால் தான் ளநரையும் ஏற்படுகின்றது. இளநரை இருந்தால் அது சிறிய வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். எனவே இந்த இளநரையை எப்படி போக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இளநரையை போக்கும் முறை
மஞ்சள் மற்றும் தேன்: தலைமுடியை கறுபாக்க முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் 1 டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து பேஸ்ட் தயார் செய்யவும்.
இப்போது இந்த கலவையை முடி முதல் வேர்கள் வரை தடவவும். இதை 15 நிமிடங்கள் விட்டு விட்ட பின்னர் கழுவவும். இப்படி செய்து வந்தால் கூந்தல் கறுப்பாக மாறுவதை உணர்வீர்கள்.
மஞ்சள் மற்றும் அலோ வேரா: மஞ்சள் மற்றும் கற்றாழை சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுவது மட்டமல்லாமல் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் பேணுகிறது.
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மஞ்சள், 1 கப் தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றைக் கலந்து ஒரு ஸ்ப்ரே போத்தலில் தடவவும். இதை குளிக்கும் முன் தலையில் ஸ்ப்ரே செய்ததன் பின்னர் குளித்தால் தலைமுடி கறுப்பாக வளரும்.
மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்: மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கூட முடியை கருப்பாக்க பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்த, ஒரு பாத்திரத்தில் 3 முதல் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெயை சிறிது சூடாக்கிய பிறகு, அதில் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கலவையை தயார் செய்யவும். இப்போது இந்தக் கலவையைக் கொண்டு முடியை மசாஜ் செய்யவும்.
இந்த கலவையை தலைமுடியில் 20 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு முடியை சுத்தம் செய்யவும். இந்த கலவை முடியை கருமையாக்குவது மட்டுமின்றி முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |