குட்டி தக்காளிக்குள் ஒளிந்திருக்கும் ஏராளமான பியூட்டி டிப்ஸ்!
எமது சமையல் அறையில் சிவப்பு நிறத்தில் மிகவும் மென்மையாக இருக்கும் ஒரு வகை காய்கறி தான் தக்காளிப்பழம்.
இந்த பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, மற்றும் வைட்டமின் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து ஏராளமான நன்மைகளை தருகிறது.
தொடர்ந்து முகத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளுக்கு வீட்டு வைத்தியராக செயற்பட்டு பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்கிறது. இதனை காரணமாக வைத்து பல டிப்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தவகையில், கிளோவிங் செய்வதற்கு, சருமத்தில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை அகற்றுவதற்கு, கருமையை போக்குவதற்கு, என பல சரும பிரச்சினைகளுக்கு சாப்பாட்டு வாயிலாகவும் பேக்கள் வாயிலாகவும் உதவிச் செய்கிறது இந்த தக்காளிப்பழம்.
வயதானவர்களின் முகத்தில் துவாரங்கள் திறந்த நிலையில் காணப்படும் அப்போது இந்த தக்காளிப்பழத்தை எடுத்து தினமும் முகத்தில் பூசி வைத்திருந்து விட்டு கழுவினால் காலப்போக்கில் இந்த துவாரங்கள் எல்லாம் இயல்பாகவே மூடப்படுகிறது. மேலும் சிலருக்கு என்ன டிப்ஸ் பின்பற்றினாலும் முகத்தில் பொலிவு என்ற ஒன்றே இருக்காது.
இவ்வாறு கஷ்டப்படும் நண்பர்கள், தக்காளிச்சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பிரகாசம் பெறும்.
இவ்வாறான பல டிப்ஸ்கள் இந்த குட்டி தக்காளிக்குள் ஒளிந்து கிடக்கிறது, இதனை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.