பேரழகி மாதுரி தீட்சித் அழகிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் என்ன தெரியுமா?
அன்றைய 90ஸ் காலத்தில் மாதுரி தீட்சித் என்றால் பிடிக்காதவர்கள் என எவரும் இருக்க மாட்டார்கள்.
காரணம் அவரின் அழகு தான். அவ்வளவு கொள்ளை கொல்லும் அழகை பெற்றவர்.
இப்படி அழகாக இருப்பதற்கு மேக்கப்பையும் தாண்டி அவர் பின்பற்றும் அழகு மற்றும் உடல் பராமரிப்பு தான் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது என்கிறார் மாதுரி தீட்சித் அவர்கள்.
இதோ அவரைப் போல நீங்களும் இளமையாக ஜொலிக்க வேண்டுமா இத ட்ரை பண்ணுங்க.
மாதுரி தீட்ஷித்
முக அழகு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் சரியாக பராமரித்து வருபவர். தன்னுடைய 53 வயதிலும் இவரின் இளமைத் தோற்றம் எல்லாரையும் பிரமிக்க வைக்கிறது.
எல்லோரின் கேள்வியும் "நீங்கள் எப்படி இன்னமும் அழகாக இருக்கிறீர்கள்" என்பதாகத்தான் இருக்கிறது. இப்படி அழகு மிஞ்சும் இளமைப் தோற்றத்தை பராமரிக்க அவர் என்னவெல்லாம் செய்கிறார்.
இது குறித்து மன திறக்கிறார் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் அவர்கள். அழகுக்கு வயது முக்கியம் இல்லை என்பது மாதுரி தீட்சித்தை பார்த்தால் தோன்றக்கூடும்.
இதோ உங்களுக்காக அவர் கூறும் அழகின் ரகசியங்கள் பற்றிய டிப்ஸ்கள்.
வெளிப்புற சருமத்திற்கு பேஸ் பேக்
மாதுரி தீட்சித் அவர் சருமத்திற்கு உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் போஷாக்கு தருகிறார். அவர் சருமத்தை பராமரிக்க இரண்டு பேஸ் பேக்குகளை பயன்படுத்துகிறார்.
ஓட்ஸ் பேஸ்பேக்
மாதுரி தீட்சித் ஓட்ஸ் பேக்குகளை பயன்படுத்தி வருகிறார்.
உங்க சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க இந்த பேஸ் பேக் உதவி செய்கிறது.
தேவையான பொருட்கள்
- 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ்
- பவுடர் 2 டீ ஸ்பூன்
- தேன் 1 டீ ஸ்பூன்
- பால் ரோஸ் வாட்டர்
பயன்படுத்தும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.
இதை உங்க சருமத்தில் தடவி காய்ந்ததும் பிறகு நீரில் அலசி விடுங்கள்.