ஒரே இரவில் வெள்ளையாக சூப்பரான ஃபேஸ் மாஸ்க்! தேன் சேர்க்காதீங்க
பொதுவாக நம்மில் பலருக்கும் இயற்கையாகவே தங்களின் முகம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இதற்காக கடைகளில் விற்கப்படும் கிரீம்களை ஆயிரம் கணக்கில் செலவு செய்து வாங்கி உபயோகிப்போம்.
இது தற்போது நிறைய பலன்கள் கொடுத்தாலம் காலப்போக்கில் முகத்திற்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
அந்தவகையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் தங்களை அழகுப்படுத்தி கொள்ளலாம்.
மேலும் விசேஸங்களின் போது முகம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால் ஃபேஸ் மாஸ்க்குகளை வீட்டிலேயே தயாரித்து உபயோகிப்பது சிறந்ததாகும்.
மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
தேவையான பொருட்கள்
1. பால் – ½ கப்
2. மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பேக் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
முகத்தை நன்றாக கழுவி விட்டு காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் பேக்கை மெதுவாக முகத்தில் தடவ வேண்டும்.
முக்கிய குறிப்பு
இதில் தேன் சேர்த்து கொள்ளலாம் ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை நாடிய பின்னர் பயன்படுத்தலாம்.