முகக் கருமையை போக்கும் வெந்தய ஃபேஸ் பெக்
வெந்தயம் என்பது வெறுமனே சமையலுக்கு மட்டும் பயன்படும் ஒரு பொருள் அல்ல.
வெந்தயத்தில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, நீர்ச்சத்து போன்றவைகளும் பொட்டாசியம், இரும்புச்சத்து, மணிச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற தாதுப் பொருட்களும் விட்டமின் ஏ, நிகோடினிக் அமிலம், தயாமின், ரிபோபிளேவின் போன்றவைகளும் அடங்கியுள்ளன.
முடி வளர்ச்சிக்கு வெந்தயம் எவ்வாறு தனது பங்களிப்பை வழங்குகின்றதோ அதேபோல் சரும அழகுக்கும் சிறந்தது.
வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தால் முகம் கருமையடைந்துவிடும். அப்போது வெந்தயத்தை நீரில் ஊறவைத்து பேஸ்ட்டாக்கி, அதனுடன் பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவியபின் அது ஊறியதும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
அரை கப் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு கொதித்ததும் அந்நீரை குளிர வைத்து பின்பு அதை தினமும் இரவில் நித்திரைக்குச் செல்லும் முன் முகம்,கை,கால்களில் தடவி மறுநாள் காலையில் கழுவி விட வேண்டும்.
அதேபோல் தேனுடன் வெந்தயப் பொடி சேர்த்து முகத்தில் தடவி நன்றாக தேய்த்துவிட்டு பின்னர் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்தால் பருக்கள் வருவது தடுக்கப்படும். முகத்தின் நிறம் அதிகமாக, தயிருடன் வெந்தயப் பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரத்தின் பின்னர் கழுவ வேண்டும்.
வெந்தயமானது சிறந்த க்ளென்சராகப் பயன்படும். அதனால் இதனைக் கொண்டு சருமத்தை பராமரிப்பதால் சருமத் துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் நீங்கும்.