இலங்கை நாட்டின் கண்கவர் இடங்கள்! நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக விடுமுறை என கூறும் போது ஞாபகத்திற்கு வருது இலங்கை தான்.
அந்தளவு சிறப்பு வாய்ந்த இடங்கள் இலங்கையில் காணப்படுகின்றன. இயற்கையுடன் கூடிய அழகிய இடங்கள் இலங்கையில் இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருகிறார்கள்.
நான்கு பக்கமும் நீர் சூழ, மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என சொர்க்கத்தையே கண்முன் காட்டுகிறது.
அத்துடன் இலங்கை ரூபாயின் வீழ்ச்சி சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதியில் அவர்கள் வாழ்ந்த சான்றுகள் இலங்கையில் இருக்கின்றது. இது சிறுவர்களுக்கு ஒரு பயனுள்ள விடயமாக இருக்கும்.
அந்த வகையில் இலங்கையில் இருக்கும் சிறப்பான இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இலங்கையில் இருக்கும் சிறப்பு வாய்ந்த இடங்கள்
1. கொழும்பு
இலங்கையின் தலைநகரமாக கொழும்பு இருக்கின்றது. சுற்றுலா பயணிகள் இலங்கை மக்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இங்கு தங்கலாம். சிறந்த ஹொட்டல்கள், தங்கும் விடுதிகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தும் வசதிகளும் இருக்கின்றன.
2. காலி
இலங்கையில் காணப்படும் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று தான் காலி. இங்கு இலங்கை ஆட்சிமுறையின் சான்றுகள் அதிகமாக இருக்கின்றது. இதன் காரணமாக அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள்.
அருங்காட்சியகங்கள் மற்றும் பாரம்பரிய மிக்க சாலைகள் இங்கு அதிகமாக இருக்கின்றன. அத்துடன் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான இடங்கள் அதிகமாக இருக்கின்றன.
3. யால தேசிய வனம்
யால எனக் கூறும் போது ஞாபகத்திற்கு வருவது மிருகங்கள் தான். இயற்கை வனப்பு மிக்க இலங்கையில் அதிகமான விலங்குகள் இங்கு தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை இலங்கை தேசிய பூங்காவின் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
4. அனுராதபுரம்
பௌத்த மன்னர்கள் இலங்கையை ஆட்சிச் செய்யும் போது அனுராதபுரம் தலைநகரமாக இருந்தது. இதன் காரணமாக அக்கால மன்னர்களின் சான்றுகள் கல்வெட்டுகள் மற்றும் கோயில்கள் அதிகமான அனுராதபுரத்தில் இருக்கின்றன.
5. சிங்கராஜா வனம்
இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |