இலங்கை வந்தால் இந்த பூங்காவை மிஸ் பண்ணிறாதீங்க..! இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இடங்கள்
பொதுவாக விடுமறை நேரங்களில் எங்காவது சென்று சிறந்த வகையில் அந்த நாட்களை கழிக்க வேண்டும் என ஆசைக் கொள்வோம்.
அந்த வகையில், இந்தியாவின் தெற்கு கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லை அண்மையில் ஒரு சிறிய தீவு நாடு அது தான் இலங்கை.
தன்னுடைய கொள்ளையழகாலும் வசீகரிக்கும் இடங்களாலும் வெளிநாட்டவர்களை சுண்டியிழுக்கும் ஒரு குட்டி தீவாக இலங்கை பார்க்கப்படுகின்றது.
தற்போது இலங்கை இருக்கும் பொருளாதார நெருக்கடியால் பண வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் சுற்றுலா பயணிகளில் தங்களின் குடும்பத்தாருடன் வருகை தந்து விடுமுறை நாட்களை பொன் நாட்களாக மாற்றி செல்கிறார்கள்.
அந்த வகையில் குடும்பத்துடன் வருகை தந்தால் கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்க கூடிய பூங்காக்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இலங்கையில் பார்க்க வேண்டிய பூங்காக்கள்
1. வில்பத்து தேசிய பூங்கா
இலங்கையில் இருக்கும் மிகப் பழமையான தேசிய பூங்காக்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த பூங்கா "வில்லிஸ்" என்று அழைக்கப்படும் ஏராளமான இயற்கை ஏரிகளுக்கு புகழ்பெற்றது.
அத்துடன் பூங்காவின் அடர்ந்த தாவரங்கள், கம்பீரமான இலங்கை சிறுத்தை, யானை, மான் மற்றும் பறவை இனங்கள் உட்பட பல்வேறு வனவிலங்குகளுக்கு வாழ்விடமாகவும் பராமரிக்கப்பட்டிருக்கின்றது.
Image - Red Dot Tours
2. யாலா தேசிய பூங்கா
இந்த பூங்கா இலங்கையில் தென்கிழக்கில் பகுதியில் அமைந்துள்ளது. இது மிகவும் பிரபலமாக பூங்காவாக இருப்பதற்கு முக்கிய காரணம் இங்குள்ள விலங்குகள் தான். யாலா பூங்காவில் சிறுத்தைகள் தவிர, யாலா யானைகள், சோம்பல் கரடிகள், முதலைகள் மற்றும் ஒரு பறவைகள் என அனைத்தையும் பார்க்கலாம்.
Image - The Common Wanderer
3. உடவலவை தேசிய பூங்கா
உடவலவை பூங்கா தீவின் சரியாக தெற்கு பகுதியில் இருக்கின்றது. மற்றும் இந்த இடமானது மென்மையான ராட்சதர்களுக்கு பாதுகாப்பான சரணாலயத்தை வழங்கப்பட்டுள்ளது.. யானைகளைத் தவிர, உடவலவே நீர் எருமைகள், மான்கள், முதலைகள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களின் தாயகம் என்று கூட கூறலாம்.
Image - Sri lanka Travel Pages
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |