இலங்கை - கொழும்பு சென்றால் இந்த இடங்களை பார்க்க மறந்துறாதீங்க!
பொதுவாக விடுமுறைகள் வரும் குடும்பத்தினருடன் எங்காவது வெளியில் செல்லலாம் என சிந்தித்து கொண்டிருப்போம்.
இவ்வாறான சிந்தனைகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் இலங்கை - கொழும்பு பகுதிக்கு வருகை தரலாம்.
இயற்கை அழகுடன் சேர்த்து பிரமிக்க வைக்கும் பல இடங்கள் இலங்கையில் காணப்படுகின்றது.
வெளிநாட்டவரின் சுற்றுலாத்துறையின் மூலம் பிரசித்திப் பெற்ற நாடுகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் மறந்தும் கூட இந்த இடங்களை பார்க்காமல் சென்று விடாதீர்கள். அப்படி என்ன இடங்கள் நீங்கள் பார்க்க மறந்து விட்டீர்கள் என தொடர்ந்து பார்க்கலாம்.
இலங்கையில் நீங்க பார்க்க மறந்த இடங்கள்
1. தியத உயன – கொழும்பு
இந்த இடம் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாவாசிகளுக்கு சுற்றி பார்ப்பதற்கு சிறந்த இடமாக இருக்கின்றது. இந்த வளாகங்கள் வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலுக்கு அடுத்ததாக உள்ளன.
மாலை நேரங்களில் குடும்பத்துடன் அல்லது துணையுடன் வெளியே சுற்றி பார்க்க வேண்டும் என்றால் இங்கு தாராளமாக செல்லலாம்.
2. கல்கிசை கடற்கரை – கொழும்பு
தெஹிவளை கடற்கரை, கல்கிசை கடற்கரை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த இடம் இலங்கை கொழும்பு பகுதியில் காணப்படுகின்றது. கடற்கரை விடுமுறைக்கு இது ஒரு சிறந்த இடமாகவும் இருந்து வருகின்றது.
அதிக வேலை பழுக் காரணத்தினால் அழுத்தத்தை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இங்கு வருகை தரலாம். அத்துடன் அழகை ரசித்து, நேரடி இசை மற்றும் கலைஞர்கள் இசையுடன் கஃபேக்களை நீங்கள் பார்வையிடலாம்.
3. களனி ரஜமஹா விகாரை
“களனி ராஜமஹா விகாரை” கொழும்பு பகுதியில் பிரபல்யமான இலங்கை பௌத்த மக்களின் மத வெளிபாடாகவும் இருந்து வருகின்றது.ஆற்றின் நீரோடைகளால் சூழப்பட்ட ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள இந்த அற்புதமான கோவில், சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட மிக அழகான காட்சிகளில் ஒன்றாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |