நடிகர் விஜய்யை சீண்டிய பிரபல டிவி.. பீஸ்ட் படம் கூர்கா 2 படமா? இணையத்தில் ட்ரெண்டிங்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை போக்கும் வகையில் இருப்பதாக ட்ரெய்லரை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு ஒப்பந்த வர்த்தகம் தற்போது சூடுபிடித்துள்ளது.
பீஸ்ட் படம் காப்பியா?
இந்த நிலையில், ட்ரெய்லர் வந்த ஒரு சில மணிநேரத்தில் பீஸ்ட் படத்தின் காப்பி எந்த திரைப்படம் பாணி என நெட்டிசன்கள் கலாய்த்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் யோகிபாபு நடித்த கூர்கா திரைப்படம் போல் இருப்பதாகவும், கூர்கா 2 தான் பீஸ்ட் எனவும், மற்றொரு ட்ரெண்டிங்காக நெட்பிளிக்ஸுல் ஹுட் அடித்த வெப் சீரியஸான மணி மணிஹீஸ்ட் காட்சிகள் போல் இடம்பெற்றுள்ளதாகவும் ட்ரெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
திடீரென்று முடியை வெட்டிய சினேகன் மனைவி! அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே?
விஜய் டிவி கலாய்
இதற்கெல்லாம் மேல், பிரபல விஜய் டிவி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், கூர்கா படம் போஸ்டரை வெளியிட்டு யாருக்கெல்லாம் இந்த படம் பிடிக்கும் என நக்கலாக ட்வீட் செய்துள்ளனர்.
என்னதான் நெல்சன் டாக்டர் படத்தை காமெடியை வைத்தே ஓட்டி எஸ்கேப் ஆகிருந்தாலும், இந்த படத்தில் வசமாக சிக்கியதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
எத்தன பேருக்கு இந்த படம் பிடிக்கும் #Gurkha #VijaySuper pic.twitter.com/NN7Ut4an3Q
— Vijay Super (@VijaySuperOffl) April 2, 2022