BB Ultimate டைட்டில் வின்னர் யார் தெரியுமா? நூலிழையில் வெற்றியைத் தவறவிட்ட போட்டியாளர்…செம ட்விஸ்ட்!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பாலா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஓ.டி.டி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ’பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
பிக் பாஸ் 5 சீசன்களிலும் கலந்து கொண்டு திறமையாக விளையாடிய வனிதா விஜயகுமார், சிநேகன், ஜூலி, அனிதா சம்பத், தாமரை, நிரூப், பாலா உள்ளிட்ட போட்டியாளர்களே இங்கும் போட்டியாளர்களாகக் களம் இறங்கினார்கள்.
நிகழ்ச்சி தொடங்கி வழக்கமான எவிக்ஷனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினார்கள்.
நாக சைதன்யாவை வெறுப்பேற்றிய சமந்தா….என்ன செய்தார் தெரியுமா?
15 லட்சத்துடன் வெளியேறிய சுருதி
தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சுருதி 15 லட்சம் எடுத்துக் கொண்டு சில தினங்களுக்கு முன் வெளியேறினார்.
70 நாள்கள் முடிவடைந்த நிலையில் நேற்று நிகழ்ச்சியின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஆரம்பத்தில் பாலாவுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த நிலைமை மாறி நிரூப் மற்றும் பாலாவுக்கிடையில் டைட்டிலுக்கான போட்டி நடந்துள்ளது.
கோடை வெயில் சுட்டெரிக்குதா? எதையெல்லாம் சாப்பிடணும் தெரியுமா?
வெற்றியாளரான பாலா
இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் டைட்டிலை வென்று ‘பிக் பாஸ் அல்டிமேட்'டின் முதல் டைட்டில் வின்னர் என்கிற பெருமையைப் பாலா பெற்றுள்ளார்.
அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.