என்ன நினப்புல சுத்துறீங்க.. விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கிய துஷார்- அரோரா ரியாக்ஷன்
“உங்க மேல பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்துச்சு, என்ன நினப்புல சுத்துறீங்க..” என விஜய் சேதுபதி துஷாரை பிரித்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது.
சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.
அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
வசமாக சிக்கிய துஷார்
இந்த நிலையில், இந்த வாரம் மாடல் அழகி அப்சரா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
காதல் மன்னனாக இருக்கும் துஷாரை பார்த்து விஜய் சேதுபதி பேச துவங்கியுள்ளார். அதில், “பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் போது துஷார் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் நீங்கள் இப்படி நடந்து கொள்வீங்க-ன்னு எனக்கு தெரியாது. மைக் போடலை, எப்.ஜே தூங்குகிறார் அதையும் பார்க்கல..” என அடுத்தடுத்து துஷார் மீது விஜய் சேதுபதி குற்றச்சாட்டுக்களை வைத்துக் கொண்டே போகிறார்.
இதற்கெல்லாம் துஷார் என்ன பதில் கொடுப்பார் என பார்ப்பதற்கு ரசிகர்களும் போட்டியாளர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். துஷாரை விளையாட விடாமல் தடுக்கும் அரோரா என்ன பதில் கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |