கம்ருதின் அரோராவுக்கு செய்த துரோகம்.. இந்த வாரம் வெளியேறுவது உறுதி
இந்த வாரம் நாமினேஷனில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து காதல் லீலைகள் செய்துக் கொண்டிருக்கும் பெண் போட்டியாளர்கள் இருவரும் சிக்கியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது.சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.
அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி, அப்சரா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
கம்ருதின் அரோராவுக்கு செய்த துரோகம்
இந்த நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் தேர்வு ஆரம்பமாகியுள்ளது.
அதில், உனக்காக தான் இந்த பிக்பாஸ் வீ்ட்டிற்குள் வந்தேன் என அரோராவிடம் பேசிய கம்ருதின் முதல் தடவையாக அவருடைய காதலை மறந்து அரோராவை நாமினேட் செய்திருக்கிறார். இவர் இப்படி செய்வார் என்பதை சின்னத்திரை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கவில்லை.
இதனை தொடர்ந்து பேசிய துஷார் ஆதிரையை நாமினேட் செய்துள்ளார். ஆதிரை இன்னும் விளையாட்டை புரிந்து கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார் என அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். கெமியும் அரோராவை தான் நாமினேட் செய்திருக்கிறார்.
இன்றைய நாள் வெளியான தகவல்படி, அரோரா, ஆதிரை, ரம்யா ஜோ ஆகியோர் நிச்சயம் நாமினேஷன் லிஸ்ட் இருப்பார்கள்.