கம்ருதினுக்கு வக்காலத்து வாங்கும் பார்வதி.. நடிப்பு அரக்கன் காட்டிய ரியாக்ஷன்
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களை விமர்சித்த பார்வதி கம்ருதினுக்கு ஆதரவாக பேசியதும் திவாகரன் கொடுத்த ரியாக்ஷன் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சி தமிழில் அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமானது.
அதில் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார். இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
கம்ருதினை காதலிக்கிறாரா பார்வதி?
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் காதல் சர்ச்சைகள் இந்த சீசனில் அதிகரித்துள்ளது. வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் காதல் தொடர்பான சர்ச்சைகளை ஏற்படுத்த இருவர் இருப்பின், இந்த சீசனில் ஏகப்பட்ட ஜோடிகள் கிளம்பியுள்ளனர்.
அதில், எப். ஜே- ஆதிரை, அரோரா- துஷார், பார்வதி- கம்ருதின், கம்ருதின்- அரோரா இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த சர்ச்சைக்கு மத்தியில் திவாகரனிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி பேசிய பார்வதி, கம்ருதினுக்கு ஆதரவாக பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதற்கு என்ன நடக்கிறது என புரியாத திவாகரன் கொடுத்த ரியாக்ஷன் இணையவாசிகளை கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |