ஆத்திரமடைந்த பிக்பாஸ்.. பறிப்போன தலைவர் பதவி- சூடுபிடிக்கும் ஆட்டம்
பிக்பாஸ் சீசன் 9-ல் போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்துக் கொள்ள முடியாத பிக்பாஸ் இந்த வார தலைவர் பதவியை பறித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பட்டு வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
ஆத்திரத்தில் பிக்பாஸ் எடுத்த முடிவு
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் தங்களுக்குள்ளே பிரச்சினை செய்து கொண்டு, ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சியான தருணங்கள் குறைந்து சண்டைகள் அதிகமாகியுள்ளது. இரண்டு வாரங்களாக பொறுத்துக் கொண்டிருந்த பிக்பாஸ், பொறுத்துக் கொள்ள முடியாமல் போட்டியாளர்களை கண்டித்து விட்டு, பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் பதவியை பறித்து விட்டார்.
ஒழுக்கம் இல்லாத வீட்டிற்கு தலைவர் இல்லை என்றும் கூறி விட்டார். மனம் உடைந்து போன துஷாரா சோகமாக நடந்துச் செல்லும் காட்சியை ப்ரோமோ பார்க்கக் கூடியதாக உள்ளது.
இனியாவது சண்டைகளை நிறுத்தி விட்டு, மக்களை சந்தோஷப்படுத்தும் வேலைகளை செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |