நேரம் பார்த்து காதல் குயின்களை போட்டுக் கொடுத்த Housemates- பிக்பாஸுன் அதிரடி
பிக்பாஸ் வீட்டில் காதல் லீலைகளை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கும் அரோரா மற்றும் ஆதிரை இருவரையும் பிக்பாஸ் சிறைக்கு அனுப்பியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பட்டு வருகிறது.
அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
சிறைக்குச் செல்லும் காதல் குயின்கள்
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் தங்களுக்குள்ளே பிரச்சினை செய்து கொண்டு, ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் சில போட்டியாளர்கள் காதல் லீலைகளை செய்து வருகிறார்கள். ஆதிரை- எப். ஜே, அரோரா- துஷார், கம்ருதீன்- அரோரா இப்படி சர்ச்சைகளை சமூக வலைத்தளங்களில் கிளப்பிக் கொண்டும் சிலர் உள்ளே விளையாடாமல் இருக்கிறார்கள்.
இதனை கவனித்த பிக்பாஸ் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் விளையாடாமல் இருக்கும் போட்டியாளர்கள் இருவரை தெரிவு செய்ய வேண்டும் என டாஸ்க் கொடுக்கிறார். அதில் அரோரா, ஆதிரை இருவரும் தெரிவுச் செய்யப்படுகிறார்கள். இவர்கள் இருவரையும் பிக்பாஸ் சிறைக்கு போகும்படி கூறி விடுகிறார்.
இனியும் இவர்களின் காதல் விளையாட்டுக்குகள் தொடருமா? என்பதை காண இணையவாசிகள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |