Fj உடன் நெருக்கமானது நடிப்பு- ஓபனாக பேசிய ஆதிரை- நடந்தது என்ன?
முதல் முறையாக பிக்பாஸ் வீட்டிற்குள் Fj உடன் நெருக்கமாக இருந்தது நடிப்பு என ஆதிரை பேசிய காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. அதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுவரையில், 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் ஆதிரை நான்காவது ஆளாக வெளியேறியுள்ளார்.
ஆதிரை- எப். ஜே இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்திய காதல் லீலைகள் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது.

பார்வதி - கம்ருதீன் இருவரும் செய்யும் வேலைகளுக்கு மக்கள் அவர்கள் பக்கம் உள்ள கொந்தளிப்புக்களை வழங்கி வருகிறார்கள்.
Fj உடன் நெருக்கமானது நடிப்பு
இந்த நிலையில், கடந்த வாரம் வெளியேறிய ஆதிரை தற்போது பல யூடியூப் சேனல்களுக்கு வரிசையாக பேட்டிக் கொடுத்து வருகிறார்.
அதில் பேசிய ஆதிரை, “நான் பிக்பாஸ் வீட்டில் அனைவருடனும் தான் இருந்தேன். அவர்கள் என்னை தவறாக காட்டி விட்டார்கள். எப்.ஜே உடன் இருந்தது எல்லாம் ஒரு வகையான நடிப்பு தான், அது காதல் அல்ல, வெளியில் மக்கள் பார்த்தது என்னுடைய ஒரு பக்கம் தான்.

தவறாக பார்க்கிறார்கள் என்றால் அது மக்கள் பார்வையில் தான் தவறு உள்ளது. என்னுடைய விளையாட்டை புரிந்தும் சில மக்கள் பார்த்திருக்கிறார்கள். அது தற்போது எனக்கு புரிய வருகிறது. ஆனால் தான் தற்போது வெளியில் போகும் ஆள் அல்ல..” என ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் நெட்டிசன்கள் ஆதிரை பற்றிய மோசமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |