நோய் எதிர்ப்பு சக்தியை BOOST செய்யும் பானங்கள்.. வெறும் வயிற்றில் குடிக்கலாமா?
பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்த பின்னர் கொஞ்சம் சோம்பலாக இருக்கும்.
இது சில ஆரோக்கிய குறைபாடுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் காரணமாகவும் இருக்கலாம்.
ஒரு நாளை ஆரோக்கியமான உணவுமுறையுடன் ஆரம்பிக்கும் பொழுது அன்றைய நாளையே சுறுசுறுப்பாக மாற்றி விடலாம். காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது சாதாரணமானது என்றாலும் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குணமிக்க பானங்கள் குடிப்பது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.
டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு நாளடைவில் ஆரோக்கிய குறைபாடுகள் வரலாம். ஆனால் மருத்துவ குணமிக்க பானங்கள் குடிப்பதால் ஆரோக்கியமான நாளை பெற முடியும்.
சரியான காலை பானத்தை தெரிவு செய்யும் ஒருவருக்கு வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். அதே சமயம், செரிமானமும் மேம்படும். ஜிம்மிற்குச் செல்பவராக இருந்தாலும் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

அந்த வகையில், ஒவ்வொரு நாளையும் சுறுசுறுப்பாக மாற்றும் சக்திவாய்ந்த பானங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. தேன்+ சூடான எலுமிச்சை நீர்
தேனுடன் சூடான எலுமிச்சை நீர் கலந்து காலையில் குடிக்கும் பொழுது உங்களுடைய வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். அத்துடன் உடம்பில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.
வைட்டமின் சி நிறைந்த இந்த பானத்துடன் தேன் கலந்து குடிக்கும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்களுடைய ஆற்றலும் அதிகமாகும்.

2. கிரீன் டீ
ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் லேசான காஃபின் சேர்க்கப்பட்ட கிரீன் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் காலையில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கிரீன் டீயில் உள்ள எல்-தியானைன் கலவை அமைதியான கவனத்தை அதிகரிக்கும்.

3. ஆப்பிள் சைடர் வினிகர் டிடாக்ஸ் பானம்
ஆப்பிள் சீடர் வினிகர் (ACV) இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது. எடையை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரும்புபவர்கள் இதனை குடிக்கலாம். வீக்கத்தையும் குறைக்கும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி ஏ.சி.வி.யைக் கலந்து குடிக்கலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |