இந்த ராசி ஆண்களிடம் ஜாக்கிறதையா இருங்க! காதலில் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுமத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே பெண்கள் மீதும் காதல் மீதும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் ஏமாற்றுவதில் கில்லாடிகளாகவும் இருப்பார்களாம்.

அப்படி காதல் என்ற பெயரில் பெண்களை அதிகம் ஏமாற்றும் குணம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியினரிடம் அடிப்படையிலேயே உற்சாகமும், சாகசமும் நிறைந்திருக்கும் இவர்கள் எப்போதும் வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசி ஆண்கள் எந்தவொரு உறவிலும் அரிதாகவே திருப்தி அடைகின்றார்கள்.இவர்களின் இந்த குணம் பல பெண்களிடமும் காதல்வயப்பட முக்கிய காரணமாக இருக்கின்றது.
காதல் உறவாக இருந்தாலும் சரி, உடல்ரீதியான நெருக்கமாக இருந்தாலும் சரி அவர்கள் எப்போதும் எளிதில் சலிப்படையும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேலும் இவர்கள் செய்யும் தவறுகளை மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்கும் கலையும் இவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் சூரியனால் ஆளப்படுவதால், எப்போதும் கவனத்தின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதாவது இவர்கள் இருக்கும் இடத்தில் ராஜாவாக இருக்க வேண்டும்.
அவர்கள் இயல்பாகவே பெண்களை ஈர்க்கும் வசீகர தோற்றத்தையும் காந்த பார்வையும் கொண்டிருப்பார்கள்.
இவர்களிடம் காணப்படும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற குணம் பல பெண்களுடன் காதலில் விழுவதற்கும் அவர்களை ஏமாற்றுவதற்கும் காரணமாக இருக்கும்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் மற்ற ராசியினருடன் ஒப்பிடுகையில், அதிகம் காதல் மற்றும் காம உணர்வு கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் தங்கள் உறவுகளில் எப்போதும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள்.அதனால் வேறு பெண்களுடன் பலகினாலும் அதை தங்களின் துணைக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும் வரையில் தங்கள் துணைக்கு துரோகம் செய்வதைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். மற்ற பெண்களை நாடுவதற்கும் ஏமாற்றுவதற்கும் இவர்களின் சுயநலமான குணம் முக்கிய காரணமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |