மைனாவின் முகத்திரையை கிழித்தெறிந்த இலங்கை பெண்! ஒன்பதாவது வாரத்திற்கு செல்லும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் கேட்ட கேள்விக்கு அதிரடியாக முகத்திற்கு முகம் இலங்கை பெண் பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி நாம் எதிர்பார்த்தாற்போல் அமையவிட்டாலும் ரசிகர்கள் சுட்டிக்காட்டிய பின்னர் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து குயின்சி வெளியேறியுள்ளார். இந்நிலையில் தற்போது வரை பிக் பாஸ் சீசன் 6 இருந்து சுமார் 8 போட்டியாளர்கள் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேறியுள்ளார்.
இந்த வாரம் கொடுத்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்களின் உச்சக்கட்ட பங்களிப்பை செய்திருந்தமையினால் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் செல்கிறது.
ஓபனாக பேசிய இலங்கை பெண்
இந்நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டினுள் விளையாடி வருகிறார்கள். இதில் ஒன்பதாவது வாரத்திற்கு செல்லும் போட்டியாளர்கள் யாவரை என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் கமல், “போட்டியாளர்களிடம் முன்னாள் பாராட்டி விட்டு பின்னாள் பேசுபவர்கள் யார்? ”என்று கேட்ட போது அதற்கு போட்டியாளர்கள ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டினார்கள்.
அதில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான இலங்கைப் பெண் ஜனனி, “மைனா தான் அந்த மாதிரியான வேலை செய்வார்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவரின் பதில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. காரணம் இந்த வாரம் குயின்சிக்கு பதிலாக மைனா வெளியாகுவதாக தகவல் வெளியாகிய நிலையில் குயின்சி குறைவான வாக்குகள் பெற்று வெளியேறியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.