தனுஷிற்கு முன்பு இரண்டு பேரை காதலித்தாரா ஐஸ்வர்யா? ஒரு முன்னாள் காதலர் தற்கொலை! வெளியான பகீர் உண்மை
ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவின் முன்னாள் காதலைக் குறித்து பயில்வான் பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா தனுஷ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பேச்சுப்பொருளாகவும் இருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் போட்டு உடைக்கும் பயில்வான் ஐஸ்வர்யாவின் முன்னாள் காதல் குறித்து உண்மையை உடைத்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து கொள்ளும் முன்பு சிம்புவைக் காதலித்ததாகவும், பின்பு இருவருக்கும் பிரிவு ஏற்பட்டு, இதனால் பெரும் மனஉளைச்சலில் சிம்பு காணப்பட்டார் என்று கூறியுள்ளார்.
ஆனால் சிம்புவிற்கு அடுத்ததாக ஐஸ்வர்யா தொழிலதிபர் மகன் ஒருவரைக் காதலித்ததாகவும், அந்த காதலும் தோல்வி ஏற்பட்டதால், அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதை தற்போது வெளியே கூறியுள்ளார்.
தொடர்ந்து பயில்வான் பேசுவையில், மகன்களுக்காக ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் சேர்ந்து வாழ யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் பயில்வானை சரமாரியாக சத்தம் போட்டு வருகின்றனர். சில பாசிட்டிவான தகவல்களை கூறினாலும், தேவையில்லாமல் ஐஸ்வர்யாவின் பழைய காதல் கதைகளை கிளறியது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.