ஏஆர் ரஹ்மான் தங்கச்சிய கல்யாணம் பண்ணிட்டு விரட்டியவர்தானே! பிஸ்மியை வெளுத்து வாங்கிய பயில்வான்
ஏஆர் ரஹ்மான் தங்கச்சிய காதலிச்சு கல்யாணம் பண்ணி துரத்தி விட்டுட்ட பத்திரிகையாளர் பிஸ்மி என்னை ஒழுக்கம் இல்லாதவர் என்று கூறுகின்றார் என பயில்வான் ரங்கநாதன் வெளுத்து வாங்கியுள்ளார்.
பிரபல டிவி நடிகையான ஷர்மிளா தனது யூட்யூப் சேனலில் பத்திரிகையாளர் பிஸ்மியை நேர்காணல் செய்துள்ளார்.
இதன்போது பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசுவதாகவும் ஒழுக்கமில்லாதவர் என்றும் பிஸ்மி கூறியதாக தெரிகிறது.

இதனால் கொதித்து எழுந்த பயில்வான் ரங்கநாதன், அவர்களை விளாசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் ஷர்மிளாவுக்கு 3 கணவர்கள், அவர் பாலியல் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமானார். இல்லன்னு சொல்ல முடியுமா? அது அவரோட உரிமை.
ஏஆர் ரஹ்மான் தங்கச்சியியை துரத்தி விட்டுட்டாரா?
நான் ஒழுக்கமானவன். ஆனா இவரு ஏஆர் ரஹ்மான் தங்கச்சிய காதலிச்சு கல்யாணம் பண்ணி துரத்தி விட்டுட்டாரு. என்னை ஒழுக்கம் இல்லாதவர்னு சொல்றாரு.
நான் எங்கேயாவது தண்ணியடிச்சு கலாட்டா பண்ணினேனா? நான் சிகரெட் பிடிச்சத பார்த்தியா? என்னை ஒழுக்கம் இல்லாதவன் எப்படி சொல்லலாம்?

நான் ஒரு பத்திரிகைக்காரன். நீங்க ஒரு பத்திரிகைகாரங்க. நான் எந்த நேரத்திலேயேயும் பத்திரிகைகாரங்களை தாக்கி பேச கூடாது என்கிற தார்மிக கட்டுப்பாட்டை வைத்துள்ளேன்.
அதை இப்போது நான் மீறிவிட்டேன் என்றால் அதற்கு காரணம் பிஸ்மியும் ஷர்மிளாவும் தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.