2வது மனைவியாகும் வரலட்சுமி சரத்குமார்- பயில்வான் ரங்கநாதன் சொன்னது என்ன?
பிரபல நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பதும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வதும் தெரியவந்துள்ளது.
இச்செய்தி வைரலானதை தொடர்ந்து பலரும் வரலட்சுமிக்கு வாழ்த்துமழை பொழிந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், சரத்குமார் எல்லாவற்றையும் துணிந்து நின்று எதிர்த்து போராடக்கூடியவர்.
இவரது குணம் தான் வரலட்சுமிக்கும், இவரை நாம் ஆண் என்றே அழைக்கலாம், இரவு 12 மணிக்கு தான் வரலட்சுமி வீட்டுக்கு வருவார்.
அப்படிவரும் போது யாராவது சீண்டினால் அவ்வளவு தான், நடுரோடு என்றுகூட பார்க்காமல் சண்டையிடுவார், தைரியமான பெண்.
வரலட்சுமிக்கு திருமணம் என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஏனெனில் அவருக்கு வயது 38.
திருமணம் செய்து கொள்ளப்போகும் நிக்கோலயிற்கு 41 வயது, அவரது அப்பா நடத்தி வந்த தொழிலை இவர் செய்து வருகிறார்.
இவருக்கும், கவிதா என்ற கலிபோர்னியா நாட்டு அழகிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது, இது அவருக்கு 2வது திருமணமாகும்.
சரத்குமாருக்கு ஏற்ற மாப்பிள்ளை தான் என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |