மீண்டும் சேர புலம்பும் கணவர்... க்ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வாயடைக்க வைத்த சீரியல் நடிகை ரச்சிதா
பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மிக பிரபலமடைந்தவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கணவர் தினேஷை பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியானது.
பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் இருவரும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறி திருமணம் செய்துகொண்டவர்கள். பிரிந்து வாழ்ந்து வரும் இவர்கள் இதுவரை இதுகுறித்து விளக்கம் கொடுக்கப்படவில்லை 1 வருடம் கடந்த நிலையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
பிரிவு
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரச்சிதாவுக்கு முதல் கணவருடன் விவாகரத்து, கூடிய விரைவில் இரண்டாவது கல்யாணம் என்ற செய்திகள் காட்டுத்தீ போல் பரவ தொடங்கின.
இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கணவர் தினேஷ் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ரச்சிதாவும் நானும் பிரிவது குறித்து எந்த வித சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதை பற்றி யோசிக்கவும் இல்லை. எல்லா குடும்பத்தில் நடப்பது போல் சின்ன மனகசப்பு தான். அதை சரிசெய்ய இருவரும் நேரம் எடுத்து இருக்கிறோம்.
எல்லாம் சரியாகி மறுபடியும் நல்ல விஷயத்தில் இது முடியும் என நம்புவோம். இப்போது நடப்பதை காலத்தின் கையில் கொடுத்து இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியில் ரச்சிதா
இதனிடையே, ரச்சிதா அடிக்கடி இணையத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார்.
தற்போது வெப் தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வெப் தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்காக தான் கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினாரா? என கேள்வியை எழுப்பி உள்ளனர்.