உடல் எடையைக் குறைக்கும் Bay Leaf:ஒரு டீயில் போதும்!
பிரியாணியின் வாசனைக்காக பயன்படுத்தும் பிரியாணி இலையில் டீ போட்டு குடித்து வந்தால் உடல் எடை குறைக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?
பிரியாணி இலைகளில் உள்ள சத்துக்கள் உடல் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
இது போன்று பல நோய்களுக்கு மருந்தாக இந்த இலைகள் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் இதன் சிறப்பம்சம் மற்றும் எவ்வாறு உடல் எடையை குறைக்கிறது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
பிரியாணி இலை டி
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று Gym செல்பவர்கள், தினமும் காலையில் பிரியாணி இலையை தண்ணீருடன் சேர்த்துக் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டுக்கோப்பான உடலை எளிதில் பெற முடியும்.
பெண்கள் பிரசவத்திற்கு பிறகு வயிற்று பகுதி கீழே தொங்கும் தொப்பைக்கு பிரியாணி டீ விளைவுகள் அற்ற தீர்வாகும். அதிகாலையில் டீக்கு பதிலாக இதனை குடிக்க வேண்டும்.
ஒரு டம்ளர் வெந்நீரில் 12 பிரியாணி இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் கொழுப்பை குறைத்து, நீரிழிவு நோய், மூச்சுத் திணறல் போன்ற நோய் நிலைமைகள் வராமல் கட்டுபடுத்த முடியும்.
மலச்சிக்கல், செரிமான பிரச்சினைகள் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
பக்கவிளைவுகள்
பே லாரல் பிரியாணி இலையை மாத்திரம் வெறுமனே சாப்பிட்டால், அது முழுமையாக ஜீரணம் ஆகாது.
கர்ப்பகாலம், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பிரியாணி இலையின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பிரியாணி இலையின் சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய ஆரம்பிக்கும்.
குறிப்பு: ஆனால், இந்த இலையின் சாறை எந்தளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற வரைமுறை இதுவரை வரையறுக்கப்படவில்லை.