கால் விரல் அகற்றம்... சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போய் விட்டது- பிரபல நடிகர் வேதனை
காமெடி நடிகராக இருந்து அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவரின் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?
காமெடி நடிகர் பாவா லட்சுமணன்
தமிழ் சினிமாவில் பஞ்சம் இல்லாத அளவிற்கு பல நடிகர்கள் இருந்தாலும் தனது நகைச்சுவையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் பாவா லட்சுமணன்.

இவர் நடித்ததில் வடிவேலுவுடன் இணைந்து நடித்தது தான் அதிகம். மேலும், இவர் பல உச்ச நடிகர்களின் படத்திலும் காமெடியனாகவும் வேறு சில கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். சில காலமாக சினிமாவில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்த இவர் கொரோனா காலங்களில் கூட இறந்து விட்டதாக பல தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளங்கள் முழுவதிலும் இவரைப் பற்றிய தகவல்கள் தான் அதிகமாப பேசப்பட்டு வருகிறது.
வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்

நடிகர் பாவா லட்சுமணனுக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாமல் மீறிப் போனதால் அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் கட்டை விரல் அகற்றப்பட்டது.
இவரின் சிகிச்சைக்கு பிறகு நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டு பல சோகமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார் அதில், அவர் கூறியதாவது, வாழ வழியில்லாமல் இருந்த நேரங்களில் நண்பர்களின் உதவியால் தான் கழித்து வந்தேன்.
சில காலமாக படவாய்ப்புகள் இல்லாமல் போனது. தற்போது என் கட்டை விரலையும் எடுத்து விட்டார்கள் இது எனக்கு பெரிய வலியில்லை சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காமல் போனது தான் பெரிய வலியாக இருக்கிறது. இந்த காயம் சரியானவுடன் வாய்ப்பு தேட வேண்டும் எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை பெற்றவர்களும் இப்போது உயிருடன் இல்லை.
இப்போது எனக்கு 58 வயது ஆகிறது திருமணமும் செய்துக் கொள்ளவில்லை உதவி செய்ய குழந்தைகளும் இல்லை அப்படி இருந்தால் நான் ஏன் எல்லாரிடமும் உதவி கேட்கப் போகிறேன்.

எனக்கு ஒரு அக்கா மட்டும் தான் இருக்கிறார் அவருக்கும் பெரிய வசதி இல்லை அதனால் தான் சினிமாவில் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
சினிமாவிலும் கூட நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல அவ்வளவு சம்பளம் எல்லாம் கிடைக்காது கிடைக்கும் கொஞ்ச சம்பளத்தை வைத்து எப்படி சென்னையில் வாழ்வது, மருத்து மாத்திரைக்கு கூடபணமில்லாமல் தான் அரசு மருத்துவமனைக்கு வந்தேன் என பல வேதனையான விடயங்களை மனம் விட்டு பேசியிருக்கிறார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |