சிம்புவிற்கு திருமணம்: தாயார் கொடுத்த விளக்கம்! இப்போதைக்கு வாய்ப்பு இல்லை...!
40 வயதாகின்ற நிலையிலும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கும் சிம்புவின் திருமணம் குறித்து தாயார் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
நடிகர் சிம்பு
குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.
இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினர்.
அதற்கு அடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். மேலும், இவரின் பேரில் பல சர்ச்சை செய்திகளும் அதிகளவாகவே இருந்து வந்தது.
இவர் நடிக்கும் சில நடிகைகளோடு காதல் வயப்பட்டதாகவும் அவை எதுவுமே சரிவரவில்லை எனவும் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களில் நயன்தாரா மற்றும் ஹன்சிகாவுடன் ஏற்பட்ட காதல் விடயங்கள் தான் பெரிதாகப் பேசப்பட்டது. இதனால் இவர் சில காலம் படங்கள் எதிலும் நடிக்காமல் விலகியிருந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆரம்பித்தார்.
அண்மையில் கூட வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படம் வெளியாகி அமோக ஓடிக்கொண்டிருக்கிறது.
திருமணம் குறித்து தாயாரின் பதில்
இந்நிலையில், தற்போது சிம்புவின் பத்து தல திரைப்படத்தை பார்த்து விட்டு சென்றுக்கொண்டிருக்கையில் அவரை வரும் வழியில் சிம்புவின் திருமணம் குறித்து கேட்டதற்கு, அவர் கூறியுள்ளதாவது,
“அதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்றும் “அவர் என்னைக்கி சொல்கிறாரோ அன்னைக்கு தான் அவரது திருமணம்” என்றும் கூறியிருக்கிறார்
இதனைக் கேட்ட ரசிகர்கள் ஆகமொத்தம் இப்போதைக்கு சிம்புவின் திருமணம் நடக்க வாய்ப்பில்லை போலும் என கூறிவருகின்றனர்.