சர்க்கரை நோயினால் ஏற்பட்ட விபரீதம்! பிரபல காமெடி நடிகருக்கு நேர்ந்த சோகம்
பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பாவா லட்சுமணன்
தமிழ் சினிமாவில் பல படங்களில் கொமடி நடிகராக வலம் வருபவர் தான் பாவா லட்சுமணன். இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ள நிலையில், இவரது கொமடி காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கக்கூடியதாகவே இருந்து வருகின்றது.
இந்நிலையில் பாவா லட்சுமணன் சில ஆண்டுகளாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஓமந்தூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் கால் கட்டைவிரல் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கொமடி நடிகர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் உணவுகள்
நீரிழிவு நோயிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமெனில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் அடங்கிய சாலட்டை சேர்த்துக் கொள்ளவும்.
அதாவது கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், கீரை மற்றும் பூண்டு சேர்த்து, இதனனுடன் 1 டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்த்து சாலட்டாக தினமும் ஒருமுறையாவது எடுத்துக் கொள்ளவும்.
வினிகர் சேர்ப்பதால் உணவிலிருந்து உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவு குறையுமாம். இதனால் ரத்தத்தில் சரக்கரை அளவு அதிகம் சேராமல் நீரிழிவு நோய் தடுக்கப்படுகின்றது.
ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்கள் என முழுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
இவை காலை உணவிற்கு சிறந்ததாக இருப்பதுடன், அதிக நார்ச்சத்துகளும் உள்ளது. இந்த நார்ச்சத்தானது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து நீரிழிவு நோய் வருவதை தடுக்கின்றது.
காபி பருகுவது பலரும் தீங்கு என்று கூறினாலும், ஒரு நாளைக்கு 2 கப் காபி குடித்து வநதால் டைப் 2 நீரிழிவு வருவதை தடுக்கமுடிகின்றது.
பட்டையை பொடியாகவே அல்லது பட்டை எண்ணெயாகவோ உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோய் வருவதை 48 சதவீதம் தடுக்கலாம்.
அதிக நடைப்பயிற்சி மேற்கொள்வது நீரிழிவு நோய் வராமல் தடுக்கின்றது. ஒரு நாளைக்கு சுமார் 40 நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தவிர்க்க வேண்டிய விடயங்கள்
மன அழுத்தம் சர்க்கரை நோயை கொண்டு வரும் என்பதால், மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களை நீங்களே யோகா, தியானம் போன்றவற்றினை செய்து மன அழுத்தம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நாவிற்கு சுவை கொடுக்கும் என்பதால் ஃபாஸ்ட் புட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகின்றது.
இதே போன்று புகைபிடிக்கும் பழக்கத்தினையும் விட்டுவிட வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
முக்கியமாக வாழைப்பூ, வாழைத்தண்டு, நெல்லிக்காய், வெந்தயம், பாகற்காய், கோவக்காய், கீரை வகைகள் இவற்றினை உணவுகளோடு கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து அதனை வறுத்து பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் இரவு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சுடுதண்ணீரில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு நிச்சயம் குறையுமாம்.
அதேபோல் நடைப்பயிற்சி சைக்கிள் நீச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றும் மன அழுத்தம் இல்லாமல் வாழ பழகிக் கொண்டால் நீரிழிவு நோயிலிருந்து நிச்சயம் விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்தி மீன் நீரிழிவு நோயாளிகள் இந்த மீனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.