பெங்களூர் சென்றால் இந்த இடங்களை மறக்காதீங்க..
பொதுவாக விடுமுறை தினங்களை குடும்பத்துடன் கழிக்க வேண்டும் என அனைவரும் நினைப்போம்.
அந்த வகையில், பெயர் பெற்ற சுற்றுலாத்தலங்களில் பெங்களூரும் (Bengaluru) ஒன்று. இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும்.
கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் உள்ளது.
இங்கு கன்னடம் பேசுவோர் (44%), தமிழ் பேசுவோர் (28%), தெலுங்கு பேசுவோர் (14%) என்பதாக உள்ளது. நகரத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக பெங்களூருவின் மக்கட் தொகை 1 கோடியைத் தாண்டியது.
இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு இருக்கிறது.
பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன.
பெங்களூருவில் அனைவரும் சுற்றிப் பார்க்கும் வகையில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. அதில் சிலவற்றை பார்க்கலாம்.
1. Bannerghatta தேசிய பூங்கா:
பெங்களூருவில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள இந்த பூங்காவில் ஆயிரக்கணக்கான தாவரங்களும், பல வகையான இனங்களும் உள்ளது.Bannerghattaவின் சிறப்பாம்சங்களானது உயிரியல் பூங்கா, முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா, பாம்பு பூங்கா மற்றும் முற்காலத்து விலங்குகளுக்குத் தனி பூங்கா ஆகியவை இதிலுள்ளது.
2. காளை கோவில்:
மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் நந்தி சிலையானது 4.5 மீட்டர் உயரம் மற்றும் 6 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. இது சிவனின் வாகனமான காளையை போற்றிக்கட்டப்பட்டது. அதுமட்டுமின்றி ஒற்றை கிரானைட் பாறையை வைத்து கேம்பகவுடா திராவிட கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ளது.
3. பெங்களூரு அரண்மனை:
மிகவும் பிரம்மாண்டமான இந்த அரண்மனையானது கட்டிடக்கலைக்கு பெயர் வாய்ந்தது. இங்கிலாந்தில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வின்ஸ்டர் கோட்டையினை முன்மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டுள்ள அரண்மனை இது. பெங்களூரின் சிறந்த சுற்றுலா தளமாக இதில் செதுக்கப்பட்ட உருவங்களானது காட்சியளிக்கிறது.
4. இஸ்கான் கோவில்:
பாரம்பரிய வடிவமைப்பு மற்றும் நவீன கட்டடக்கலைகளை உள்ளடக்கி கட்டப்பட்டது இக்கோவில். இது ஹரே கிருஷ்ணா மலைக்குன்றின் மேற்கில் அமைந்துள்ளது.
5. நந்தி மலை:
கர்நாடக மாநிலத்தின் சிக்பள்ளாபூர் மாவட்டத்தில் உயரமாக இருக்கக்கூடிய
மலைதான் இது. தென்பெண்ணை, பாலாறு, ஆர்க்காவதி ஆகிய 3 ஆறுகளானது
இந்த மலையில்தான் உற்பத்தி ஆகுது. இந்த மலைக்கு அருகிலேயே
சிக்பள்ளாபூர் நகரம் இருக்கு.நீங்க மலை மேல் நிற்கும் அவ்வேளையில்
உங்க காலடியில் மேகம் மிதந்து போகும் போன்று காட்சியளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |