வாழைப்பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? ஆபத்து ஜாக்கிரதை
வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. வாழைப்பழத்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துகளும், வைட்டமின்களும் நிறைந்திருந்திருக்கிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முதல் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் வரை 2 அல்லது 3 பழங்களை காலை உணவாக எடுத்துக் கொள்வதை பார்த்திருக்கிறோம்.
ஆனால், காலையில் வாழைப்பழத்தை சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா? என்ற சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்து கொண்டே வருகிறது. அதற்கான விளக்கத்தை இங்கு பார்க்கலாம். வாழைப்பழத்தின் நன்மைகள்: வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவையும் உள்ளன.
இதில் இருக்கும் பொட்டாசியம் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதுடன், நரம்புகள் சீராக இருக்க உதவுகிறது. மேலும், ரத்த அழுத்தத்தையும், இதய துடிப்பையும் சீராக வைத்திருக்கிறது. வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும். செரிமானத்தை ஊக்குவிக்கவும், பித்தத்தை போக்கவும் பயன்படுகிறது.
சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது. தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பெண்கள் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும். அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. மேலும், தோல் பளபளக்கும். காலை உணவாக சாப்பிடலாமா?: வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. வாழைப்பழத்தில் உள்ள சக்கரை உங்களுக்கு சக்தியை அளித்தாலும், சில மணி நேரத்தில் அதை உறிஞ்சி எடுக்கிறது.
வாழைப்பழங்கள் தற்காலிகமாக புத்துணர்வை அளித்தாலும், பின்னர் தூக்கம் மற்றும் களைப்பாக உணர வைக்கின்றன. வாழைப்பழங்களில் இயற்கையில் அமிலங்கள் இருக்கின்றன .