தொடர்ந்து 7 நாள் செவ்வாழை சாப்பிட்டால் நிகழும் அதிசயம்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். வாழைபழத்தில் பல்வேறு ரகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சத்துக்களைக் கொண்டன.
பொதுவாக வாழைப்பழத்தில் இருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டிருந்தாலும், செவ்வாழை, தனது கூட்டத்தின் ராஜா என்றே சொல்லும் அளவுக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்களை பட்டியலே இடலாம். வாழைப்பழத்தில் பல வகைகளில், சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் உள்ளன.
இந்த சிறப்பான செவ்வாழையில் உள்ள மருத்துவ குணங்கள் எவை என்பது தெரியுமா?
செவ்வாழைப்பழத்தில் கால்சியம் நிறைவாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு அவசியம் இதை கொடுக்க வேண்டும். தாய்க்கும் சிசுவுக்கும் தேவையான கால்சியம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்கிறது செவ்வாழை.
செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் (beta carotene) கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
செவ்வாழையில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. ஆண்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள செவ்வாழையை மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
பல்வலி உள்ளிட்ட பலவகையான பல் பிரச்சனைகளையும் (dental diseases) குணமாக்குக்ம் திறன் கொண்டது செவ்வாழைப்பழம். பல்வேறு சரும வியாதிகளுக்கும் செவ்வாழை சிறந்த நிவாரணமளிக்கிறது. எந்தவிதமான தோல் பிரச்சனை இருந்தாலும், செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சியை போக்கும் குணம் கொண்ட செவ்வாழையை சாப்பிட்டால், ஆண்மை குறைபாடு நீங்கும். தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெற்று, ஆண்மை தன்மை பெருகும்.