வாழைப்பழம் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்குமா? அப்போ இது தான் உண்மையா?
முக்கனிகளில் மூன்றாவது பழமாக இருக்கும் வாழைப்பழம் பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தப் பழத்தை ஏழைகளின் பழம் என்றும் செல்லுவார்கள்.
இதில் மிக அதிகமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி டிரைப்டோபெனாக மாற்றப்பட்டு டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது.
இந்த வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ.பி.பி2, சி, பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளது. இத்தகைய பல நன்மைகளைக் கொண்ட வாழைப்பழத்தை சாப்பிட்டால் கொழுப்பு அதிக்கும் என்பது உண்மையா? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழம் சாப்பிட்டால் கொழுப்பா?
ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் வாழைப்பழத்திற்கும் ஒரு இடம் இருக்கிறது. ஆனாலும் வாழைப்பழத்தில் அதிக கலோரிகள் இருப்பதாகவும் அதனால் வாழைப்பழம் சாப்பிடும் போது கொழுப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டு வருகிறது ஆனால் இது குறித்து எவ்வித ஆய்வுகளும் இல்லை.
மேலும், வாழைப்பழத்தில் நார்ச்சத்தும் குறைந்த கலோரிகளும் இருக்கிறது அதனால் உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பழமாக இருக்கிறது.
மேலும். குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நார்ச்சத்து முக்கியமானது. இந்த நார்சத்து உணவுகள் வயிற்றில் நீண்ட நேரம் உணவு உண்ட திருப்தியைக் கொடுத்து பசியை குறைக்கும்.
ஊட்டச்சத்து அடிப்படையில் வாழைப்பழங்கள் இயற்கையில் அதிகம் தரும் பழங்களில் ஒன்றாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |