சிறுநீரகத்தில் கல்லடைப்பு பிரச்சனையா? நிரந்தர தீர்வு அளிக்கும் வாழைத்தண்டு
உணவில் வாழைத்தண்டு சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாழைத்தண்டு
பொதுவாக வாழை மரத்தில் அனைத்து பகுதிகளுமே மனிதர்களின் ஆரோக்கியத்தினை அள்ளித்தருகின்றது. வாழை மரத்தின் இலை சாப்பிடுவதற்கு பயன்படுகின்றது.
வாழை இலையில் சாப்பிடுவது பாரம்பரிய செயலாக பார்க்கப்பட்டாலும், அதிக ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. வாழைப் பூ ரத்தத்தினை சுத்திகரிப்பதற்கு உதவுகின்றது.
வாழை மரத்தின் நடுவே இருக்கும் அதன் தண்டுகள் சிறுநீரக பிரச்சனையை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வாழைத்தண்டில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ளதுடன், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு
நாம் போதுமான அளவு தண்ணீர் பருகாமல் இருந்தால் சிறுநீரகத்தில் தேவையற்ற கழிவுகள் படிவமாக சேர்ந்து கற்களாக உருமாறுகின்றது.
தற்போதைய காலத்தில் பெரியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சிறுநீரகத்தில் கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழையின் நடுவே இருக்கும் தண்டில் சிறிதளவு குழி போன்ற அமைப்பை ஏற்படுத்திவிட்டு அதனை கவர் ஒன்றினால் மூடி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடவும்.

காலையில் பார்க்கும் போது அந்த குழியில் வாழையின் தண்ணீர் நிரம்பியிருக்கும். இந்த தண்ணீரானது கல்லடைப்பு உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்கின்றது.
வாழைத்தண்டு சாறையும் எடுத்துக்கொள்ளலாம். இவையும் சிறுநீரக கல், பித்தப்பை கல் இவற்றினை கரைய செய்கின்றது. மேலும் உடம்பிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றது.

இந்த தண்டில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் ரத்த அழுத்தத்தினை சமநிலையில் வைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.
வாழைத்தண்டை பொரியல், கூட்டு, ஜுஸ் என பல்வேறு முறைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |