வாழைப்பழ குண்டு பணியாரம் செய்வது எப்படி? சுவை அட்டகாசமாக இருக்குமாம்..
பொதுவாக சந்தையில் மிகக் குறைந்த விலையில் அனைவரும் வாங்கி சாப்பிடக் கூடிய பழங்களில் ஒன்று வாழைப்பழம்.
இதில் மனிதர்களுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. வாழைப்பழத்தை வைத்து நிறைய வகையான உணவுகள் தயார் செய்யலாம்.
இதன்படி, வாழைப்பழத்தை வைத்து பணியாரம் செய்யலாம். இதனை எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்காமல் சட்டியில் போட்டு சுட்டெடுக்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பணியாரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. உங்கள் வீடுகளிலும் மாலை நேர தேநீருக்கு சுவையான ஸ்நாக்ஸாக இருக்கும்.
அந்த வகையில், ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ பணியாரம் எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
வாழைப்பழ பணியாரம்
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழம் – இரண்டு
- சர்க்கரை – அரை கப்
- ஏலக்காய் – 2
- எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
- கோதுமை மாவு – அரை கப்
- துருவிய தேங்காய் – அரை கப்
- ரவை – அரை கப்
- நெய் – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை விளக்கம்
வாழைப்பழ பணியாரம் செய்ய முதலில் தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். பின்னர் 2 வாழைப்பழங்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து இன்னொரு கடாயில் சமையல் எண்ணெய் விட்டு அதில் கோதுமை மா, வறுத்த ரவை, துருவிய தேங்காய் ஆகிய மூன்றையும் மிதமான சூட்டில் வறுக்கவும்.
கொஞ்சம் போல் வறுத்த மாவை கெட்டியாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். மா கெட்டியானதும், வாழைப்பழ விழுதை போட்டு உருண்டை பிடிக்கவும்.
பின்னர் ஒரு பணியார சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்ததும் அதில் நெய் விட்டு பணியார உருண்டைகளை போட்டு எல்லா பக்கமும் நன்கு ஒன்று போல சிவக்க வேக வைத்து எடுக்கவும். ரெசிபியை சரியாக செய்தால் சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |