உங்க தலைமுடி தேங்காய் நார் போல் உள்ளதா? அப்போ இந்த ஹேர் பேக் போடுங்க - பலன் ஒரே வாரத்தில்..
பொதுவாக பெண்களுக்கு தலைமுடியின் கீழ்ப்பகுதி தேங்காய் நார் போல் வெடித்து வெடித்து சொர சொரப்பாக காணப்படும்.
இவ்வாறு இருந்தால் தலைமுடி வளர்ச்சி பாதியில் தடைப்படுகின்றது.
அந்த வகையில் இது போன்ற பிரச்சினைகளுக்கு வெளியிலுள்ள மருந்துகளை நாடுவதை விட வீட்டிலுள்ள மூலிகைப் பொருட்களை பயன்படுத்தலாம்.
தேங்காய் நார் இருப்பதை எப்படி சாஃப்ட் ஷைனியாக மாற்றலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
வாழைப்பழ ஹேர் பேக்
தேவையான பொருட்கள்
- பழுத்த வாழைப்பழம் - 1
- தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பழுத்த வாழைப்பழங்களை துண்டங்களாக வெட்டி ஒரு பவுலில் போட்டு வைத்து கொள்ளவும்.
பின்னர் மிக்ஸி சாரை எடுத்து அதில் வெட்டிய வாழைப்பழங்கள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
கலவையை எடுத்து தனியாக இருக்கும் ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து விடவும். இறுதியாக கலவையுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
வாழைப்பழ கலவையை நன்றாக கலந்து குளிக்கும் முன்னர் தலைக்கு நன்றாக அப்ளை செய்து விட்டு மசாஜ் செய்ய வேண்டும்.
நன்றாக வெந்நீரில் குளித்து விட்டால் தேங்காய் நார் சென்று விடும்.
இந்த ரெமடியை வாரத்திற்கு மூன்று தடவைகள் செய்து வந்தால் அடுத்த வாரமே நல்ல பலன் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |