பழுத்த வாழைப்பழம் இருக்கா? நாவில் கரையும் அல்வா செய்து சாப்பிடுங்க
பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் செவ்வாழை, ரஸ்தாலி, நாட்டு வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், மலைவாழை என பல வகைகள் உண்டு.
7000 ஆண்டுகளுக்கு முன் பயிரிடப்பட்ட பழமான வாழைப்பழத்தில், பொட்டாசியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது.
இதுதவிர வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, இரும்புச்சத்து, மெக்னீசியம், சோடியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
இந்த பதிவில் பழுத்த வாழைப்பழத்தை கொண்டு சுவையான அல்வா செய்வது எப்படி என பார்க்கலாம்.
Shutterstock
தேவையான பொருட்கள்
பழுத்த வாழைப்பழம்- 5
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம்- ஒரு கப்
நெய்- 5 முதல் 6 டீஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை- தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைப்பழங்களின் தோலை உரித்துவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் நெய்யை ஊற்றவும், நெய் உருகியதும் உலர் திராட்சை, முந்திரி சேர்த்து வறுக்கவும், இதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு அந்த கடாயிலேயே அரைத்து வைத்துள்ள வாழைப்பழ பேஸ்டை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
நெய்யுடன் வாழைப்பழ பேஸ்ட் சேர்ந்து நன்றாக கரைந்த பின்னர், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்தால் அல்வா பதத்திற்கு வந்துவிடவும், இதில் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்க்கவும்.
கடைசியாக சிறிதளவு நெய் சேர்த்து கிளறினால் சூடசூட வாழைப்பழ அல்வா தயாராகிவிடும்!!!