Vazhaipoo Biryani: வாழைப்பூவில் பிரியாணியா? ஒரு முறை செய்து பாருங்க
இரத்த அழுத்தம், இரத்த சோகை, மூலம் , வயிற்று புண் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைப்பூ அரும்நடதாகும்.
வைட்டமின் ஏ, பி 1, சி, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், கால்சியம், இரும்புச்சத்து என ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த வாழைப்பூவில் அசத்தல் சுவையில் பிரியாணி செய்யலாம் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
மிகவும் எளிமையான முறையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்படும் வகையில் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ பிரியாணியை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சீரக சம்பா அரிசி - 2 டம்ளர்
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
நறுக்கிய வாழைப்பூ - 1 கப்
பிரியாணி மசாலா தூள் - 2 தே.கரண்டி
சிக்கன் மசாலா தூள் - 1 தே.கரண்டி
கறி மசாலா தூள் - அரை தே.கரண்டி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி-பூண்டு விழுது - 2 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
பிரியாணி இலை - 1
பட்டை - 2
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
தயிர் - 4 தே.கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தே.கரண்டி
நெய் - 4 தே.கரண்டி
எண்ணெய் - 4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
புதினா - கால் கப்
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூமானதும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்கு வதக்கி,பொடியாக நறுக்கிய தக்காளி,ஒரு கைப்பிடி புதினா, பிரியாணி மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து எலுமிச்சை சாறு, புளிக்காத தயிர் சேர்த்து வதக்கிவிட்டு, பின்னர், 30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அரண்டு விசில் வரும் வரையில் வேகவிட வேண்டும்.
அதற்கிடையில் வாழைப்பூ மசாலா தயாரிக்க ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, கறி மசாலா தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட்டு, தயார் செய்து வைத்துள்ள பிரியாணியை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி, அதனுடன் இந்த வாபை்பூவையும் சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வாழைப்பூ பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |