banana adai: நாவூரும் சுவையில் வாழைப்பழ அடை... இப்படி செய்து அசத்துங்க
பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீடுகள் என்றால், மாலை நேரத்தில் ஏதாவது நொறுக்குத் தீனி செய்து தரசொல்லி அல்லது வாங்கித்தர சொல்லி சிறுவர்கள் நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள்.
அவ்வாறான நேரங்களில் கடைகளில் செய்யப்பட்ட துரித உணவுகளை வாங்கிக்கொடுப்பது அவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பதை ஏற்படுத்த கூடும்.
அதனை தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ அடை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நேந்திரம் பழம் - 2
வெல்லம் - 1 கப்
தண்ணீர் - 2 கப்
நெய் - 1 தே.கரண்டி 3 தே.கரண்டி + 2 தே.கரண்டி
முந்திரி - 10 (பொடியாக நறுக்கியது)
உலர் திராட்சை - சிறிதளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
ரவை - 1/2 கப்
அரிசி மாவு - 2 தே.கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வாழை இலையை எடுத்து, அதை நெருப்பில் லேசாக வாட்டி எடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இதில் வெல்லத்தை போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரையவிட்டு, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு நன்றாக வருத்து எடுத்துக்டிகொள்ள வேண்டும்.
முந்திரி லேசாக நிறமாறத் ஆரம்பிக்கும் போது, அதில் உலர் திராட்சையை சேர்த்து நன்கு கிளறி, திராட்சை உப்பி வந்ததும், அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்
பின்பு அதே பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும், வாழைப்பழத்தை சேர்த்து, நன்றாக வதக்கி,அதில் துருவிய தேங்காயை சேர்த்து மிதமான தீயில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ரவையை சேர்த்து நல்ல மணம் வந்து, நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அதில் அரிசி மாவையும் சேர்த்து, நன்றாக கிளறி விட்டு, அதில் உப்பு, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி நன்றாக கிளறிவிட வேண்டும்.
கலவையில் உள்ள நீர் சுண்டி ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், ஏற்கனவே வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சையை சேர்த்து கிளறி, 2 மேசைக்கரண்டி நெய்யையும் ஊற்றி கிளறி விட்டு இறக்கிவிட வேண்டும்.
அதனையடுத்து தீயில் வாட்டிய நீளமான வாழை இலையை எடுத்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாழையிலை துண்டின் நடுவே தயாரித்து வைத்துள்ள அடை கலவையை வைத்து, மடித்துக் கொள்ள வேண்டும்.இதேப் போல் அனைத்து இலைகளிலும் அடை கலவையை வைத்து மடித்துக் வைத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியில் இட்லி தட்டில் மடித்த இலைகளை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 5 நிமிடங்கள் நன்றாக வேக வைத்து எடுத்தால், ஆரோக்கியமான முறையில் சுவை நிறைந்த வாழைப்பழ அடை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |