வழுக்கையால் வந்த சோதனை! ஏமாற்றியதால் கணவன் - மனைவி வெறிச்செயல் கழுவி ஊற்றும் இணையவாசிகள்
வழுக்கை தலையை மறைத்து திருமணம் செய்த கணவரின் குற்றத்தை திருப்பி கேட்ட மனைவியை தூக்கில் தொங்க விட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொய்களால் நடக்கும் விபரீதம்
பொதுவாக திருமணங்கள் என்றால் ஆயிரம் பொய் சொல்லலாம் என்பது வழக்கம். ஆனால் சில நேரங்களில் அந்த பொய்களினால் உயிர்கள் கூட பரி போகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அந்த வகையில், இந்தியாவில், அமரம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த கோகுலகண்ணன் (32) என்பவர் தனியார் கம்பனியொன்றில் வேலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் லோகப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண வாழ்க்கையில் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்துள்ளது.
அப்போது சம்பவதினத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருந்துள்ளது.
கொலைக்கான காரணம் என்ன தெரியுமா?
இந்நிலையில் லோகப்பிரியா தற்கொலை செய்து கொண்டார் என கணவனும் மாமியாரும் அக்கப்பக்கத்திடம் கூறிய போது, அவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரையும் கைது செய்த நிலையில், மனைவியின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்கள்.
இதன்படி, பிரேத பரிசோதனையில் இவர்கள் மனைவியை கொலை செய்து விட்டு அதனை மறைக்க தற்கொலை என கதைகட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த போது கணவனுக்கு மண்டையில் முடியில்லாத காரணத்தால் விக் வைத்து குறித்த நபரை திருமணம் செய்துள்ளார்.
விக்கினால் வந்த சண்டை
அவர்களின் இந்த திருமணத்தை தொடர்ந்து முடி சண்டை தொடர்ந்து வீட்டில் வந்துள்ளது. இதனால் வாக்குவாதம் அதிகமாகியதால் குறித்த கொலை நடந்துள்ளது என கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், முடி இல்லையென்று எல்லாமா இவ்வாறு கொலை செய்வது” என கமண்ட் செய்து வருகிறார்கள்.