பக்தி சூப்பர் சிங்கரில் கடைசியாக பாடியவருக்கு கிடைத்த அங்கீகாரம்.. நடுவர் கொடுத்த சர்ப்ரைஸ்
இந்த வாரம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களுக்கான சுற்று என்பதால் போட்டியாளர்கள் கண்ணீர் வரும் அளவுக்கு பாடல்கள் பாடி அசத்தியுள்ளனர்.
பக்தி சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
ஒரே பாடலால் கண்ணீர் வர வைத்த போட்டியாளர்
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். பக்தி பாடல்கள் என கூறும் பொழுது இந்து சமயத்தை சார்ந்தவர்கள் அதிகமாக போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்துக்கள் என மூன்று சமயத்திலுள்ளவர்களும் கலந்து கொண்டு, தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், இந்த வாரம் பக்தி சூப்பர் சிங்கர் இஷ்ட தெய்வங்களுக்கான பாடல்கள் பாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட இந்த சுற்றியில் போட்டியாளர்கள் தங்களின் திறமைகளை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நடுவர்களே கண்ணீருடன் எழுந்து நின்று பாராட்டும் அளவுக்கு இவர்களின் பாடல்கள் அமைந்துள்ளது. அதில் இதுவரையில் இரண்டு போட்டியாளர்களுக்கு Golden performance கொடுக்கப்பட்டது.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |