என்னங்கடா நடக்குது இங்க.. கூட்டணி சேர்ந்த பாக்கியா, ராதிகா- ஷாக்கில் ஈஸ்வரி!
பாக்கியலட்சுமியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாக்கியா - ராதிகா இருவரும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கணவரை இழந்து பிள்ளைகளுக்காக தன்னுடைய வாழ்க்கையை நடத்தும் பெண்களை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது.
இதில் நாயகியாகவும் மக்களின் ஆதரவுடன் பாக்கியா வெற்றி நடைப்போட்டுக் கொண்டிருக்கிறார்.
யாரும் எதிர்பாராத வகையில் பாக்கியாவும் ராதிகாவும் ஒன்றாக இணைந்து குடும்ப பிரச்சினைகளை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
யார் என்ன செய்தாலும் பெண்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணமாக இருக்கின்றது.
ஈஸ்வரி வாயை திறக்க வைத்த மருமகள்கள்
கம்பேக் கொடுக்கும் பிரதீப்- ரசிகர்களை திசைத்திருப்பி விட்டு எதிர்பாராத நேரம் உள்நுழையும் போட்டியாளர்!
இந்த நிலையில், பாக்கியாவிடம் கோபிற்கு ஒரு காபி போட்டு கொடுக்குமாறு கூறுகிறார்.
ஆனால் பாக்கியா போட்டு வைத்துள்ள காபியை கோபிக்கு கொடுக்காமல் ராதிகாவிடம் கொடுத்து விட்டு செல்கிறார்.
இதனை பார்த்து கொண்டிருந்த வீட்டார் ஷாக்காகியுள்ளனர். கோபிக்கு இது ஒரு பெரும் இடியாக மாறியுள்ளது.
மேலும் பாக்கியா பார்க்க வந்த பழனிச்சாமியை பார்க்க வேண்டாம் என கூறுவதற்காக சமையலறைக்குள் கோபி செல்கிறார். இதனை தடுக்கும் வகையில் கையில் கரண்டியுடன் ராதிகா நிற்கிறார்.
ராதிகாவை பார்த்த கோபி அமைதியாக நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது. இனி வரும் காலங்களில் பாக்கியாவிற்கு ஆதரவாக ராதிகா இருப்பார் என நம்பப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |