சமையல் சோடா Vs பேக்கிங் சோடா இவை இரண்டும் உண்மையில் ஒரே பொருட்களா இல்லை வேறா?
நாம் சமையலறையில் பயன்படுத்தும் சமையல் சோடா Vs பேக்கிங் சோடா என்பற்றின் முழு விபரம் தெரியாமல் இருக்கும்.
சிலர் இந்த இரண்டு பொருட்களை எது எதற்கு போட வேண்டும் என்பதையே தெரியாமல் இருப்பார்கள். ஆனால் இது உண்மையில் வேறுபட்டதா? இதன் நன்மை தீமை என்ன எதற்கு இதை பயன்படுத்த வேண்டும் என்பதை முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். இந்த பதிவில் அதை பார்க்கலாம்.
சமையல் சோடா Vs பேக்கிங் சோடா
சமையல் சோடா என்பது உலர்ந்த மற்றும் பொடி போன்ற ஒரு பொருள் இது வெள்ளை நிறத்தில் இருக்கும். சமையல் சோடாவின் வேதியியல் பெயர் சோடியம் பைகார்பனேட் (NaHCO₃). இது பொதுவாக வீட்டில் சமைக்கும் போது சிறிய தோசை, ரொட்டி போன்ற உணவுகளுக்கு போடப்படும்.

இந்த சோடா அமிலம் மற்றும் திரவத்துடன் கலந்தவுடன் இது உடனடியாக வேலை செய்யும் . இந்த பேக்கிங் சோடா அமில மூலப்பொருளுடன் கலக்கப்படும் போது இது குமிழ்கள் வடிவில் கார்பன் டை ஆக்சைடை (CO₂) விரைவாக வெளியிடுகிறது.
இந்த சிறிய வாயு குமிழ்கள் மாவு அல்லது மாவில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் பேக்கிங் செய்யும் போது அது விரிவடைந்து, கேக்குகள், ரொட்டிகள் மற்றும் மஃபின்கள் லேசாகவும் பஞ்சுபோன்றதாக மாற்றும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த சமையல் சோடா Vs பேக்கிங் சோடா இவை இரண்டும் ஒரே பொருளே தவிர இரண்டும் வேறு கிடையாது. இதை பயன்படுத்தும் இடத்தை பொறுத்து மக்கள் இதற்கு சமையல் சோடா பேக்கிங் சோடா என பெயர் வைத்துள்ளனர்.
பேக்கிங் பவுடரை எப்போது பயன்படுத்த வேண்டும்?
நீங்கள் எலுமிச்சை சாறு, தயிர், வினிகர் அல்லது மோர் போன்ற இயற்கை அமிலப் பொருட்கள் போட்டு செய்யாத சமையலில் இதை பயன்படுத்தலாம் பொதுவான அந்த உணவுகள் முறையே கேக் பிஸ்கட்கள் ரொட்டிகள் பான்கேக்குகள் குக்கீகள் வாஃபிள்ஸ் கப்கேக்குகள் போன்றவையாகும்.

பேக்கிங் சோடாவின் பொதுவான பயன்கள்
இது பூச்சிக்கொல்லி எச்சங்களை அகற்ற உதவுவதால் பழங்கள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி துர்நாற்றம் வீசினால் அதை இது நடுநிலையாக்கும்.
இது இட்லி தோசை ரொட்டி போன்ற உணவுகளை மென்மையாக்க உதவுகிறது. இது தவிர ஓடுகளை சுத்தம் செய்வதிலும் பயன்படுத்தப்படுகிறது.

Broccoli for weight loss: உடல் எடையைக் குறைக்க அதிகமாக சிரமமா? புரோக்கோலி சாப்பிட்டால் நிகழும் அதிசயம்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |